மகாத்மா காந்தி சிலையை தூய்மைப்படுத்தும் பணியில் கல்லூரி மாணவர்கள்.

மகாத்மா காந்தி சிலையை தூய்மைப்படுத்தும் பணியில் கல்லூரி மாணவர்கள்.
X
தூய்மை இந்தியா சார்பாகம காத்மா காந்தி சிலையை தூய்மைப்படுத்தும் பணியில் கல்லூரி மாணவர்கள்.
பரமத்தி வேலூர் அக்,:01 நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கந்தசாமிக் கண்டர் கல்லூரியின் தேசிய மாணவர் படையின் (விமானப் படை) தூய்மை இந்தியா சார்பாக கல்லூரியில் இருந்து வேலூர் தேர்வு நிலை பேரூராட்சியில் உள்ள மகாத்மா காந்தி சிலை தூய்மை படுத்தும் பணியில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் பி. சாந்தி அவர்கள் முன்னிலை வகித்தார். ஆங்கிலத்துறை முனைவர் மு.கிருஷ்ணராஜ் சிறப்புரை ஆற்றினார். தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் மற்றும் தேசிய மாணவர் படை அதிகாரி( விமானப்படை) பிளையிங் ஆபிசர் முனைவர் மு. சிவக்குமார் மற்றும் தியாகி கணேசன்,பேராசிரிய பெருமக்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story