தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.39.73 கோடி மதிப்பீட்டில் 49 புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்து, முடிவுற்ற திட்டப்பணிகளை த

தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.39.73 கோடி மதிப்பீட்டில் 49 புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்து, முடிவுற்ற திட்டப்பணிகளை த
X
தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.39.73 கோடி மதிப்பீட்டில் 49 புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்து, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தனர்
தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.39.73 கோடி மதிப்பீட்டில் 49 புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்து, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தனர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியான கோனாபுரம் பிரிவு பகுதியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன் தலைமையில் ரூபாய் 39.73 கோடி மதிப்பீட்டில் 49 புதிய திட்டப் பணிகள் துவங்கி வைத்து முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தனர். இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது, தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து மாவட்டங்களில் இருக்கக்கூடிய திட்டப்பணிகளை எல்லாம் விரைவாக மக்களுடைய பயன்பாட்டு வர வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்து. முடிவுற்ற பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குதல், பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம். பள்ளிக்குழந்தைகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். தமிழ் புதல்வன் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு அமைச்சர் பெருமக்கள் தெரிவித்தார்கள். கோனாபுரம் பிரிவு பகுதியில் பிரதம மந்திரியின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு மேலும் 10 சாலைகளுக்கு ரூபாய் 28.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதை அடுத்து கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட டி.காளிபாளையம் பகுதியில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கும் கிராமப்புற தொகுப்பு வீடுகள் பராமரிப்பு செய்ய உள்ள பயனாளிகளுக்கும் ஆணை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மூலம் புதிய சாலை மேம்பாட்டு பணிகள் குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மொத்தம் 549 லட்சம் மதிப்பீட்டிலும், குலுக்குப்பாளையம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மூலம் சாலை மேம்பாட்டுப் பணிகள் குடிநீர் மேம்பாட்டு பணிகள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் முடிவுற்ற பணிகளுக்கு சுமார் 137 லட்சம் மதிப்பீட்டிலும், கரையூர் பகுதியில் சுமார் 14 பணிகளுக்கு மொத்தம் 394 லட்சம் மதிப்பீட்டில் எனவும் மொத்தம் 49 பணிகளுக்கு ரூபாய் 39.73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி 4-மண்டலத்தலைவர் .இல.பத்மநாபன்,தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.வி.செந்தில்குமார், தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம்,கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதா கருப்பசாமி,துணை தலைவர் கே.கே.துரைசாமி, தாராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் எத்திராஜ், கொளத்துப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் நகராஜன், தாராபுரம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story