நாமகிரிப்பேட்டையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ பங்கேற்பு.
![நாமகிரிப்பேட்டையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ பங்கேற்பு. நாமகிரிப்பேட்டையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ பங்கேற்பு.](https://king24x7.com/h-upload/2024/12/08/708994-1001088921.webp)
X
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கழக மூத்த முன்னோடிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ் குமார், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
நாமகிரிப்பேட்டை பேரூர் இளைஞர் அணி சார்பில் கழக இளைஞர் அணி செயலாளர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் திராவிட வரலாற்றின் தொடர்ச்சியாக விளங்கும் இளம்தலைவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைப்பெற்ற விழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கழக மூத்த முன்னோடிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ் குமார், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். விழாவானது பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ்குமார் வரவேற்புரையாற்ற ஒன்றியக் கழகச் செயலாளர் கே.பி.இராமசுவாமி தலைமையில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கே.பொன்னுசாமி, பேரூர் கழக செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கழக பொருளாளர் ஏ.கே.பாலசந்தர், சேந்தமஙகலம் ஒன்றிய கழக செயலாளர் அசோக்குமார், மாநில அயலக அணி துணை செயலாளர் ஆர்.முத்துவேல் இராமசுவாமி, மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் சி.ஆனந்தகுமார்,மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாத், துணை அமைப்பாளர்கள் பரிதி, ரமேஷ்குமார்,கார்த்தி ஒன்றிய,நகர,பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story