தேனி மாவட்டத்தில் காமராஜர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 4 பள்ளிகளில் மூன்று பள்ளிகள் ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த பள்ளிகள்

ஏத்தக்கோயில் கள்ளர் தொடக்கப் பள்ளி, கணேசபுரம் ஊராட்சிஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஜி.உசிலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி, ஏ.வாடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி 4 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் காமராஜர் விருது, பரிசுத்தொகை வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்ட 4 அரசு பள்ளிகளுக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டது.இப்பள்ளிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த ரூ. 25 ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம் வரை பரிசு வழங்கப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளின் செயல்பாடுகள் குழுக்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகிறது. ஆய்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் வருகை பதிவேடு, பள்ளி செயல்பாடுகள், வகுப்பறைகள், பள்ளி வளாக பராமரிப்பு உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படுகின்றன. ஆய்வின் முடிவில் தலா ஒரு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் காமராஜர் விருதிற்கு தேர்வு செய்யப்படுகிறது. தேர்வாகும் தொடக்க பள்ளிக்கு ரூ.25 ஆயிரம், நடுநிலை பள்ளிக்கு ரூ.50 ஆயிரம், உயர்நிலை பள்ளிக்கு ரூ.75 ஆயிரம், மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.ஒரு லட்சம் வழங்கப்படுகிறது. இதனை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.கடந்த நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்ட ஏத்தக்கோயில் கள்ளர் தொடக்கப் பள்ளி, கணேசபுரம் ஊராட்சிஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஜி.உசிலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி, ஏ.வாடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி 4 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் காமராஜர் விருது, பரிசுத்தொகை வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
Next Story