குரூப் 4 தேர்வில் பெரம்பலூர் மாணவர்கள் சாதனை
X
Perambalur King 24x7 |5 Feb 2025 12:21 PM IST
கரம் கொடு மனித மற்றும் வள்ளலார் கல்வி மையத்தின் சார்பில் இருவருக்கும் பாராட்டு
தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.இந்த தேர்வை பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் வள்ளலார் கல்வி மையத்தின் மாணவர்கள் இளைஞர்கள் இது தமிழ்நாடு அளவில் பெரியசாமி என்பவர் 472 வது இடத்தினையும் பிரியா என்பவர் 1238 வது இடத்தினையும் பிடித்து வெற்றி பெற்றனர் தற்போது பெரியசாமி திருவள்ளூரில் கிராம நிர்வாக அலுவலராகவும் பிரியா கருவூல கணக்கு துறையில் அலுவலராகவும் அரசு பதவியில் பணி அமர்த்தப்பட்டனர். பணிய அமர்த்தபட்ட இருவருக்கும் வள்ளலார் கல்வி மையத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. வள்ளலார் கல்வி மைய நிறுவன பிரபாத் கலாம் குருகையில் கரம் கொடு மனித அறக்கட்டளை வள்ளலார் கல்வி மையம் தொடர்ந்து தமிழகத்தில் பல ஏழை எளிய திறமையான மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு போட்டித் தேர்வு சார்ந்தவர்களுக்கு கட்டணம் இல்லாமல் வகுப்புகளையும் நேரடியாக இணைய வழியாகவும் திறமையான ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தி அவர்களை வெற்றி பெற செய்து அரசு வேலையில் பணி அமர்த்துவது என முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றார்
Next Story