நாட்டு வெடி குண்டு வழக்கில் பகீர் வாக்கு மூலம் கொடுத்த 4 பேர்

நாட்டு வெடி குண்டு வழக்கில் பகீர் வாக்கு மூலம் கொடுத்த 4 பேர்
X
நாட்டு வெடி குண்டு வழக்கில் பகீர் வாக்கு மூலம் கொடுத்த 4 பேர்
திருவள்ளூர் அருகே வாலிபர் கொலை: நாட்டு வெடிகுண்டுகளை ‘யூடியூப்’ பார்த்து செய்த கொலையாளிகள் கைதான சிறுவன் உள்பட 4 பேர் பகீர் வாக்கு மூலம் திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முகேஷ்(25). வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்யும் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த தீபன் (20), ஜாவித் (21) ஆகியோருடன் அதே பகுதியில் உள்ள சிறிய பாலம் அருகே பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் திடீரென முகேஷ் தரப்பினர் மீது நாட்டுவெடிகுண்டுகளை வீசி அரிவாளாலும் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த முகேஷ் பரிதாபமாக இறந்தார். மேலும் அவரது நண்பர்கள் தீபன், ஜாவித் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஏற்கனவே சின்னமண்டலி பகுதியைசேர்ந்த ஆகாஷ் என்பவருடன் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து ஆகாஷ், பேரம்பாக்கத்தை சேர்ந்த சஞ்சய் ரியாஸ் மற்றும் 17 வயது சிறுவன் என 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. கொலையுண்ட முகேசின் தம்பி ஒருவர் ஆகாசுடன் பழகி வந்து உள்ளார். இதனை பிடிக்காத முகேஷ் தனது தம்பியை ஆகாஷ் உடன் பழகுவதை கண்டித்தார். இதனால் ஏற்பட்ட தகராறில் கடந்த வாரம் ஆகாசை சிலர் வெட்டினர். இதில் அவரது காது அறுந்தது. 'காது இதற்கு பழிவாங்கும் விதமாக முகேசை ஆகாஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெடிகுண்டு வீசி தீர்த்து கட்டியது தெரியவந்தது. மேலும் கொலைக்கு பயன்படுத்திய நாட்டு வெடிகுண்டை அவர்கள் யூடியூப் பார்த்து தயாரித்தாக தெரிவித்து உள்ளனர். இதற்காக கடைகளில் பெரிய பட்டாசுகளை அதிக அளவில் வாங்கி அதில் உள்ள கந்தகத்தை சேகரித்து 3 நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்ததாக தெரிவித்து இருக்கிறார்கள் இந்த கொலைக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கில் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்
Next Story