ராசிபுரம் அருகே கோனேரிப்பட்டி ஏரியில் 40 வயது மதிப்புத்தக்க பெண் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை..

ராசிபுரம் அருகே கோனேரிப்பட்டி ஏரியில் 40 வயது மதிப்புத்தக்க பெண் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை..
X
ராசிபுரம் அருகே கோனேரிப்பட்டி ஏரியில் 40 வயது மதிப்புத்தக்க பெண் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி பகுதியில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் எரியானது அமைந்துள்ளது. ஏரியின் அருகே 40 வயது மதிப்பு தக்க பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி பாதி எரிந்த நிலையில் சடலமாக இருந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ராசிபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 40 வயது மதிப்பு தக்க பெண் தானாகவே மண்ணெண்ணெய் ஊற்றி பத்த வைத்துக் கொண்டாரா அல்லது வேறு யாரேனும் கொலை செய்து தீ வைத்தனர? என்ற பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story