சேலம் அருகே விபத்தில் சிக்கிய ஜீப்பில் 400 கிலோ குட்கா பறிமுதல்

சேலம் அருகே விபத்தில் சிக்கிய ஜீப்பில் 400 கிலோ குட்கா பறிமுதல்
X
தப்பி ஓடிய டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு
சேலத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை வலசையூர் நோக்கி ஒரு தனியார் பள்ளி பஸ் சென்றது. அந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இருந்தனர். அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து வலசையூர் அருகே சென்றபோது, எதிரே அரூரில் இருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த ஜீப், அந்த தனியார் பள்ளி பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்சுக்குள் இருந்த மாணவ, மாணவிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் விபத்தை ஏற்படுத்திய ஜீப் டிரைவர் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது விபத்தில் சிக்கிய ஜீப்பில் சோதனை செய்து பார்த்தபோது, அதற்குள் 400 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ஜீப்பில் குட்காவை கடத்தி வந்த டிரைவர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? அரூரில் இருந்து சேலத்திற்கு எந்த இடத்திற்கு குட்கா கொண்டு செல்லப்படுகிறது? என்பது குறித்து காரிப்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி தப்பிஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story