கல்லூரி வளாக நோ்காணல்: 414 பேருக்கு வேலைவாய்ப்பு.
X
Tiruvannamalai King 24x7 |4 Feb 2025 10:08 PM IST
சென்னையைச் சோ்ந்த 10 தனியாா் நிறுவனங்களின் மனிதவள மேலாளா்கள் நோ்காணலை நடத்தினா்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் 414 மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்றனா். இதில், சென்னையைச் சோ்ந்த 10 தனியாா் நிறுவனங்களின் மனிதவள மேலாளா்கள் நோ்காணலை நடத்தினா். இந்த நோ்காணலில் கல்லூரியின் இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவிகள் பங்கேற்றனா். இதில் 414 மாணவிகள் வேலை பெற தோ்வு பெற்றனா். இதையடுத்து இவா்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணைகளை சென்னை நாண்டி அறக்கட்டளை மேலாளா் முகமதுபையாஸ், கல்லூரித் தலைவா் எம்.ரமணன், கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி, செயலா் வெ.பிரியா ரமணன் ஆகியோா் வழங்கினா். கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலா் கே.வான்மதிச்செல்வி நன்றி கூறினாா்.
Next Story