நாமக்கல்லில் ஆயிரத்தில் ஒருத்தீ.

நாமக்கல்லில் ஆயிரத்தில் ஒருத்தீ.
X
நாமக்கல்லில் ஃபெமி நிறுவனம் நடத்திய பிரம்மாண்ட ஆயிரத்தில் ஒருத்தி பெண்களால் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல்லில் ஃபெமி நிறுவனம் சார்பில் ஆயிரத்தில் ஒருத்தீ என்னும் தலைப்பில் பெண்களால் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஃபெமி நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் கோமதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையத்தின் மருத்துவர் டாக்டர் மல்லிகா குழந்தைவேல், டிரினிட்டி மகளிர் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் அருணா செல்வராஜ் மற்றும் அரசு வழக்கறிஞர் ரோஜா வீரகுமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சமுதாயத்தில் பெண் குழந்தைகளுக்கு நடக்கும் வன்முறைகளை எதிர்க்கும் ஆயிரத்தில் ஒருத்திய நீங்கள்? வீட்டில் இருக்கும் பெண்களின் சுய முன்னேற்றம் மற்றும் பொருளாதாரத்தை உயர்த்தும் ஆயிரத்தில் ஒருத்திய நீங்கள்? இளம் பெண்களுக்கு சரியான நேரத்தில் மாதவிடாய் விழிப்புணர்வு வழங்கும் ஆயிரத்தில் ஒருத்தியா நீங்கள் என்ற கேள்விகளின் கீழ் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் திரளாக பங்கேற்றி நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

Next Story