தீ விபத்தினால் சேதம் அடைந்த வீடுகள், கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான ஆணையை வழங்கிய அமைச்சர் மா. மதிவேந்தன்.

X
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தீ விபத்தினால் வீடு சேதம் அடைந்தவருக்கு உடனடியாக நிவாரண உதவிகள் மற்றும் ரூ.3.50 இலட்சம் மதிப்பில் கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான ஆணையினை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், வடகரை ஆத்தூர் மேல்முகம் கிராமம், கண்டிப்பாளையம் பகுதியில் வசித்து வரும் பாண்டியன் த/பெ.கருப்பண்ணன் (வயது 59) இவருக்கு சொந்தமான கீற்றால் வேயப்பட்ட வீடு கடந்த 12.06.2025 அன்று மாலை எதிர்பாராத விதமாக தீப்பற்றிக் கொண்டதில், வீடு முழுவதுமாக சேதம் அடைந்து, வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து விட்டது. மேலும் மேற்படி பகுதியில் உள்ள மக்களால் மேற்கண்ட தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 18.06.2025 அன்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தீ விபத்தினால் வீடு சேதம் அடைந்தவருக்கு உடனடியாக நிவாரண உதவிகள் மற்றும் ரூ.3.50 இலட்சம் மதிப்பில் கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான ஆணையினை, மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கினார். மேலும், சமையல் பொருட்கள் அடங்கிய தொகுப்பு, வேட்டி, சேலை, போர்வை, கொசுவலை உள்ளிட்ட பொருட்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கே.ஏ.சுரேஷ்குமார் உட்பட துறைச்சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story