விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.
X
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு இயல்பு மழை அளவு 716.54 மி.மீ. தற்போது வரை (23.06.2025) 270.36 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. ஜீன் மாதம் முடிய இயல்பு மழையளவை விட83.41 மி.மீ. அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது. 2025 -26 ஆம் ஆண்டில் மே 2025 மாதம் வரை நெல் 67 எக்டர், சிறுதானியங்கள் 3867 எக்டர் பயறு வகைகள் 884 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 3224 எக்டர், பருத்தி 445 எக்டர் மற்றும் கரும்பு 562 எக்டர் என மொத்தம் 9049 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலைப் பயிர்களில் தக்காளி 72 எக்டர், கத்திரி 58 எக்டர், வெண்டை 44 எக்டர், மிளகாய் 5 எக்டர், மரவள்ளி 68 எக்டர், வெங்காயம் 109 எக்டர், மஞ்சள் 6 எக்டர் மற்றும் வாழை 4 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள் மற்றும் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டு காரீப் பருவத்திற்கு பாசிப் பயறு பயிர் செய்த விவசாயிகள் 15.07.2025 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்படவுள்ளது. எனவே, அனைத்து கால்நடை வளர்ப்போர் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, தெரிவித்தார்.மேலும், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, அவர்களிடம் விவசாய பெருமக்கள் 130-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜி.அருளரசு, வேளாண்மை இணை இயக்குநர் பெ.கலைச்செல்வி, வருவாய் கோட்டாட்சியர்கள் சாந்தி (நாமக்கல்), சே.சுகந்தி (திருச்செங்கோடு), தோட்டக்கலைத் துணை இயக்குநர் மா.புவனேஷ்வரி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் எஸ்.பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) க.இராமச்சந்திரன் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story