தேசிய அளவில் கோவாவில் நடைபெற்ற வில்வித்தைப் போட்டியில் நவோதயா பள்ளி மாணவர் மாபெரும் சாதனை.

தேசிய அளவில் கோவாவில் நடைபெற்ற வில்வித்தைப் போட்டியில்  நவோதயா பள்ளி மாணவர் மாபெரும் சாதனை.
X

Pic

தேசிய அளவில் கோவா மாநிலத்தில் 21ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பள்ளி மாணவ மாணவியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் வருகை தந்தனர். தமிழ்நாட்டிலிருந்து நமது நவோதயா பள்ளி மாணவர் தேவக் பாபு (எட்டாம் வகுப்பு) கலந்துகொண்டு வில்வித்தைப் போட்டியில் 13 வயது உட்பட்டோர் பிரிவில் முதலிடத்தைப் பிடித்து “கோல்டு மெடல் மற்றும் பிரான்ஸ் மெடல்” பெற்றுள்ளார் பள்ளியின் செயலாளர் தனபால் மாணவரை வாழ்த்தும் போது “மாணவர் தேவக் பாபு ஒரு தலைசிறந்த விளையாட்டு வீரராகவும் ஆகசிறந்த வெற்றியாளராக அவருடைய எதிர்காலம் அமையும் என்று வாழ்த்தினார்கள்” மேலும் பள்ளியின் பொருளாளர் கா. தேனருவி மெடலை அணிவித்து சான்றிதழ் வழங்கினாா.; அவர் பேசுகையில் “நமது பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் தேவக் பாபு தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது அவருக்கும் அவருடைய பெற்றோருக்கும் மிகப்பெரிய நற்பெயரையும் புகழையும் பெற்றுத் தரும். நமது பள்ளி மாணவரின் இந்த வெற்றி இதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து பலவெற்றிகளைப் பெற்று வில்வித்தைப் போட்டியில் உலக அளவில் எதிரொலிக்க வேண்டும்.” என்று வாழ்த்தினார்”. கோவாவில் நடைப்பெற்ற தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டிக்கு அழைத்துச் சென்று ஒத்துழைப்பு நல்கிய அவருடைய பெற்றோருக்கும் இந்த இனிய நேரத்தில் என்னுடைய வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார். மேலும் பள்ளி முதல்வர் ஆசிரியர்கள் பணியாளர்கள் என அனைவரும் வெகுவாக மாணவரை வாழ்த்தி பாராட்டினார்கள்.
Next Story