ராசிபுரம் அருகே பெண் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பணி சுமையின் காரணமாக மரணமா?

X
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் காவலர் குடியிருப்பில் வசிப்பவர் காமாட்சி இவர் ராசிபுரம் அடுத்துள்ள பேளுக்குறிச்சி காவல் பெண் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பணியாற்றி வருகிறார்.
இவருடைய கணவர் விஜியகுமார் இவர்களுக்கு விஜய ரதிஸ் (16) என்ற மகனும் கார்ஷினியா (15) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் இவரது உடல் நிலை குறைவு காரணமாக ஒரு மாத காலமாக விடுமுறை எடுத்ததாக கூறப்படுகிறது.இதனை அடுத்த அவர் பணிக்கு வந்த போது அவருக்கு தொடர்ந்து இரவு பணி வழங்கப்பட்டள்ளது. இந்த இரவு பணி சுமை காரணமாக தனது உதவினர்களிடம் என்னால் வேலை பார்க்க முடியவில்லை அரை நேரம் விடுமுறை கேட்டால் கூட விடுமுறை தரமுடியாது என்று ஆய்வாளர் கூறியதாக தனது உறவினரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து நேற்று இரவு பணி முடித்து விட்டு விடியற்காலை 2 மணி அளவில் காமாட்சி ஒய்வறைக்கு சென்று ஓய்வெடுக்க சென்றுள்ளார். பிறகு காலை 6 மணி அளவில் எழுந்து தனது கணவர் விஜயகுமாார்க்கு போன் செய்து என்னால் வர முடியாது அதனால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புமாறு கூறியுள்ளார்.பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அவரது கணவர் காமாட்சிக்கு இரண்டு முறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை இந்நிலையில் 11.30 மணி அளவில் ராசிபுரம் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரை தொடர்பு கொண்டு உங்களது மனணவி இறந்து விட்டார் என்று கூறியதை அடுத்து தனது உறவினர்களுடன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவர் இறந்து கிடப்பதை கண்ட அவரது உறவினர்கள் இவர் பணி சுமை காரணமாகத்தான் இறந்து விட்டார்.அவர் இறந்தும் ஏன் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவில்லை ஏன் அவ்வளவு அவருக்கும் முதல்வர் சிகிச்சை அளிக்கப்படவில்லை என இது உறவினர்கள் அங்குள்ள காவல் துறையிலும் கேள்வி எழுப்பினர். பின்பு ராசிபுரம் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரில் சென்று சமாதான பேச்சுவார்த்தை ஈடுபட்டதை அடுத்து பெண் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் காமாட்சியின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உடைமாற்றும் அறையிலே பணி சுமை காரணமாக உயிரிழந்த பெண் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மரணம் அங்குள்ள சக காவல் துறை அதிகாரிகளுக்கு வேதனை அளித்துள்ளது.
Next Story