எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வெற்றி பெற திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் தங்கமணி.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வெற்றி பெற திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் தங்கமணி.
X
நாமக்கல் மாவட்டம் தும்மங்குறிச்சியில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்ட தலைமை கழக அலுவலகத்தில் நாமக்கல் மாவட்டம் அதிமுக மகளிர் அணி ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என்று.
திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் அதிமுக மகளிர் அணியை சேர்ந்த 108 பேர் கலந்து கொண்டனர். இந்த பூஜையை கலந்து கொண்டவர்களுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி தட்டு மற்றும் புடவை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பரமத்தி சட்டமன்ற உறுப்பினர் சேகர், முன்னாள் அமைச்சர் சரோஜா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் வைரம் தமிழரசி, மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீதேவி மோகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.திருவிளக்கு பூஜைக்கு பின் முன்னாள் அமைச்சர் தங்கமணி அளித்த பேட்டியில்.. எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில் எடப்பாடி பழனிசாமி நலமுடன் வாழவேண்டும், 2026 ல் மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டும் என சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.வீடு வீடாக சென்று அதிமுக சார்பில் பிரச்சாரம் செய்வது என உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஓரணியில் தமிழ்நாடு என திமுக சொல்வதற்கு அதிக அளவில் திமுகவில் உறுப்பினர்கள் சேரவில்லை என்பதை காட்டுகிறது. இல்லையென்றால் நேரடியாக சென்று உறுப்பினராக சேர்க்க வேண்டிய அவசியமில்லை.நாங்கள் கிராமம் கிராமமாக 2 கோடி அதிமுக உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். அதிமுகவும், கூட்டணி கட்சியினர் வெற்றிப்பெறவும் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது என்றார்.
Next Story