தமிழ்நாடு துணை முதலமைச்சரின் வருகையை குறித்து நடைபெறும் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக அவசர செயற்குழு கூட்டம்.

X
நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் நாமக்கல் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் நாமக்கல் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற உள்ளது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக அவசர செயற்குழுக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு நாமக்கல் மோகனூர் சாலை, முல்லை நகரில் உள்ள நாமக்கல் கிழக்கு மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் இனமான பேராசிரியர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட அவைத்தலைவர் சி.மணிமாறன் தலைமையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக துணை செயலாளருமான கே.பொன்னுசாமி, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் ஆகியோர்கள் முன்னிலையில், நடைபெறும் இக்கூட்டத்திற்கு தொகுதிப் பார்வையாளர்கள், இராசிபுரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் நன்னியூர் ராஜேந்திரன், மாநில நெசவாளர் அணி தலைவர், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ரேகா பிரியதர்ஷினி, மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர், நாமக்கல் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் முனவர் ஜான், மாநில சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணைச் செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், பொறுப்பாளர், சிறப்பு அழைப்பாளர்கள், அனைத்து சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பொருள்.10.07.2025 அன்று நாமக்கல் மாவட்டத்திற்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் வருகை குறித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ – உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்து . கழக ஆக்க பணிகள் குறித்து. இங்ஙனம், கே.ஆர்.என்.இராஜேஸ்குமார்,எம்.பி., நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர்.
Next Story