மரக்கன்று நட்ட எல்லை காவல் படை வீரர்கள்

கன்னியாகுமரி கல்லூரியில்
சிவகங்கை இந்தோ திபத்திய எல்லை காவல் படையில் பணியமர்ந்தோர் பயிற்சி மைய டிஐஜி ஜஸ்டின் ராபர்ட் வழிகாட்டுதலில் பயிற்சி மைய கமாண்டர் சந்தன் மிஸ்ரா தலைமையில் 25 வீரர்களைக் கொண்ட சைக்கிள் பேரணி ஜூலை மாதம் 8-ம்தேதி தனுஷ்கோடியில் தொடங்கி 12-ம் தேதி கன்னியாகுமரியில் வந்தடைந்தது. இந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரிக்கு வருகை தந்து கல்லூரி மாணவ மாணவிகளுடன் கல்லூரி வளாகத்தில் கலந்துரையாடல் நடத்தி பின்பு கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் டி சி மகேஷ் தலைமை தாங்கினார். ராணுவ துணை கமாண்டர் ஜெயபிரகாஷ் யாதவ், இன்ஸ்பெக்டர் அன்பு செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி வணிகவியல் துறை தலைவர் முனைவர் ஆர் தர்ம ரஜினி வரவேற்று பேசினார். என்சிசி கப்பல் படை பிரிவு அதிகாரி.அ. பிரபு மாறச்சன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பேராசிரியர் டாக்டர்.சுரேஷ் கல்லூரி நூலகர் முனைவர் அ. சங்கர் மற்றும் மாணவ மாணவியர்கள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை கல்லூரி என் சி சி கப்பற்படையினர் செய்திருந்தனர்.
Next Story