உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நாமக்கல் வட்டம், செல்லப்பம்பட்டியில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் வட்டம், செல்லப்பம்பட்டி தாளம்பாடி கவின் மஹாலில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் கடந்த 15.07.2025 முதல் 24 நகர்ப்புற மற்றும் 15 ஊரகப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. தற்பொழுது 3-ம் கட்டமாக செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 10 வரை 60 முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில், இன்றைய தினம் நாமக்கல் மாநகராட்சி வீசாணம் அரசு துவக்கப்பள்ளி, இராசிபுரம் நகராட்சி அங்காளம்மன் கோவில் தெரு, அருள்மிகு ஸ்ரீ பொன்னர் சங்கர், ஸ்ரீ வீரமாத்தி அம்மன் மண்டபம், திருச்செங்கோடு நகராட்சி வேலூர் சாலை, காவிரி நாயுடு திருமண மண்டபம், செல்லப்பம்பட்டி தாளம்பாடி கவின் மஹால், நாமகிரிப்பேட்டை வட்டாரம் திம்மநாயக்கன்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், பள்ளிப்பாளையம் வட்டாரம் பாதரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, செல்லப்பம்பட்டி தாளம்பாடி கவின் மஹாலில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Next Story


