வாக்கு திருட்டை கண்டித்து காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்

X
image
தூத்துக்குடியில் வாக்கு திருட்டை கண்டித்து காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்
இந்தியாவில் தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்படுவதை கண்டித்தும் வாக்கு திருட்டு கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் தூத்துக்குடி தெற்கு புது தெரு, பள்ளி வாசல் காம்ப்ளக்ஸ் எம்கே தெரு ஜெய்லானி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மைதீன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் வாக்கு திருட்டை கண்டித்து கையெழுத்து பெறப்பட்டது இந்த நிகழ்ச்சியில் வார்டு தலைவர் புகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
