ஓட்டுகளின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயம்.

ஆலகஞ்சோலை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயம்.
நித்திரவிளை அருகே வாவறை பகுதியை சேர்ந்த 15 வாலிபர் கள் நேற்று ஆலஞ்சோலை அருகே சானல் கரை பகுதியிலுள்ள தனியார் தோட்டத்தில் விடுமுறை கொண்டாட வேனில் வந்தனர். மாலையில் இவர்கள் தங்கள் வாகனத்தில் வீடு திரும்பினர்.அந்த வாலிபர்கள் பயணித்த டெம்போ சானல் கரை பாலம் பகுதியில் வந்த போது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்தது. வாகனம் விபத்திற்குள்ளானதும் வாகனத்தின் ஒரு பக்கத்திலுள்ள கண் ணாடிகள் உடைந்து, உள்ளே இருந்த ஒரு வரின் கால், கை உள்ளிட்ட பகுதிகள் ரோட் டில் உரசி பலத்த காயம் ஏற்பட்டது. நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.விபத்து நடந்ததும் அக்கம்பக்கத்தில் உள்ள வர்கள் ஓடி வந்து, வாகனத்தின் பின்பக்க கண் ணாடியை உடைத்து, உள் இருந்தவர்களை மீட்டனர். பின்னர் கயிறு கட்டி வாகனத்தை ரோட் டின் ஓரத்தில் நிறுத்தினர். விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென்றனர். நான்கு பேர் கடையால் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். படுகாயம் அடைந்த வரை குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். விபத்துகுறித்த தகவல் அறிந்ததும் கடையாலுமூடு போலீசார் சம்பவ இடம் வந்து, வாகனத்தை பறி முதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டுவந் தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வளைவு பகுதியில் அதிவேகமாக வந்த டெம்போ, பாலத்தின் பக்கச்சுவரில் இடிக்காமல் இருக்க வெட்டி வளைத்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story