பரமத்தி வேலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர்கள் கைது.

பரமத்தி வேலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர்கள் கைது.
X
பரமத்தி வேலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர்கள் போலீசார் கைது செய்தனர்.
பரமத்தி வேலூர்:  பரமத்தி வேலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை வேலூர் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். வேலூர் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீஸார் பரமத்தி வேலூர் நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக பரமத்தி வேலூர் சேடர் தெருவைச் சேர்ந்த பழனிவேல் (53), அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (47), பொத்தனூர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (45), அதே பகுதியைச் சேர்ந்த குமார் (48), பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (எ) கோபி (45) ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story