சேலத்தில் பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி ரூ.5 கோடி மோசடி

X
சேலம் கோரிமேடு, ஜாகீர் அம்மாபாளையம், அஸ்தம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பலர் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள், துணை கமிஷனர் கீதாவை சந்தித்து மனு கொடுத்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:- சேலத்தை சேர்ந்த சிலர் எங்களுக்கு அறிமுகமாகி நாங்கள் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறோம், எங்களிடம் ரூ.1 லட்சம் செலுத்தினால் 2 மாதங்களில் பணம் இரட்டிப்பாக கொடுப்போம் என்றும் ஆசைவார்த்தை கூறினர். இதை நம்பிய நாங்கள் அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தினோம். ஓராண்டுக்கு மேலாகியும் அவர்கள் தங்களுக்கு பணம் திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டால் சரியாகவும் பதில் தெரிவிக்கவில்லை. பின்னர் அவர்களை பற்றி விசாரித்த போது, அந்த நபர்கள் எங்களை போன்று 100-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.5 கோடி வரை பணம் வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது. எனவே எங்களை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story

