பகுதிநேர வேலை தருவதாக என்ஜினீயரிடம் ரூ.50 லட்சம் மோசடி

பகுதிநேர வேலை தருவதாக என்ஜினீயரிடம் ரூ.50 லட்சம் மோசடி
X
சைபர் கிரைம் போலீசார் விசாரணை
சேலத்தை சேர்ந்த சிவில் என்ஜினீயர் ஒருவரது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் பகுதி நேர வேலை உள்ளது. பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிகம் பணம் சம்பாதிக்கலாம் என்றும் அதற்கு பணம் கட்ட வேண்டும் என்று இருந்தது. இதை நம்பிய அவர் பல தவணைகளில் ரூ.49 லட்சத்து 93 ஆயிரத்து 863 செலுத்தி உள்ளார். ஆனால் என்ஜினீயருக்கு வேலையோ, அதிக பணமோ கிடைக்கவில்லை. பின்னர் குறுஞ்செய்தி வந்த எண்ணை தொடர்பு கொண்ட போது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் சேலம் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story