மெழுகுவர்த்தி ஏந்தி பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் நூதன ஆர்ப்பாட்டம்

X

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மணிக்கூண்டு அருகே கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் நூதன ஆர்ப்பாட்டம்
இந்தியாவில் உள்ள சிறுபான்மையின மக்களின் உரிமையை பறிக்கும் வக்ஃபு வாரிய சட்டத்தில் மத்திய அரசு அதிரடியாக திருத்தம் செய்து உள்ளதாகவும் திருத்தம் செய்யப்பட்ட வக்ஃபு வாரிய சட்ட மசோதாவை இன்று 02.04.25 பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதற்கு இந்தியா கூட்டணியை சேர்ந்த அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் பேசி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் செயலை கண்டித்தும் தாக்கல் செய்யப்பட்ட மசோதா திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் இரவு மாநகராட்சி அலுவலகம் அருகே நூதன கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர காங்கிரஸ் கட்சி தலைவர் துரைமணிகண்டன் தலைமை தாங்கினார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் காஜாமைதீன் பகுதி செயலாளர் அப்பாஸ் மந்திரி பரமன் நாகலட்சுமி ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி திண்டுக்கல் மகிலா காங்கிரஸ் மாவட்ட தலைவி ரோஜா பேகம் மாமன்ற உறுப்பினர் பாரதி முன்னாள் மாவட்ட துணை தலைவர் அப்துல் ஜஃபர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்
Next Story