பாஜக 50 ஆம் ஆண்டு நினைவு கருத்தரங்கம்

பொன்னேரியில் பாஜக சார்பில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட 50 ஆம் ஆண்டு நினைவு கருத்தரங்கம் நடைபெற்றது !
பொன்னேரியில் பாஜக சார்பில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட 50 ஆம் ஆண்டு நினைவு கருத்தரங்கம் நடைபெற்றது ! திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் 1971 ஆம் ஆண்டு மத்தியில் இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போது நாடு முழுவதும் அவசரநிலை பிரமிக்கப்பட்டு எதிர்க்கட்சிகளில் பேச்சு உரிமை, ஊடகங்களின் எழுத்துரிமை பறிக்கப்பட்டது இதற்கு எதிராக குரல் கொடுத்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதின் நினைவாக 50 ஆம் ஆண்டு நினைவு கருத்தரங்கம் மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில அரசு தொடர்பு பிரிவு தலைவர் பாஸ்கர் கலந்து கொண்டு அவசர நிலையின் போது தேசிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதையும் ஜனநாயகம் சிதைக்கப்பட்டதையும் விரிவாக எடுத்துரைத்து பேசினார்.
Next Story