ஆரணி அதிமுக சார்பில் 50வது வார திண்ணைப்பிரச்சாரம். சுமார் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஆரணி அதிமுக சார்பில் 50வது வார திண்ணைப்பிரச்சாரம்.  சுமார் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
X
ஆரணியில் அதிமுக சார்பில் திண்ணைப்பிரச்சாரம் முன்னிட்டு எம்ஜிஆர் சிலை அருகிலிருந்து அதிமுகவினர் ஊர்வலமாக அண்ணாசிலை வரை சென்றனர்
ஆரணி பழையபஸ்நிலையம், எம்ஜிஆர் சிலை அருகிலிருந்து அண்ணாசிலை வரை ஜெயலலிதா பேரவை சார்பில் 50 வது வார திண்ணைப்பிரச்சார ஊர்வலம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. ஊர்வலம் முடித்த பின்பு பின்னர் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் திமுக ஆட்சியின் அவலநிலை குறித்தும், அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆரணி பழைய பஸ்நிலையம் அருகில் துவங்கியது. இதில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரி பி.பாபு தலைமை தாங்கினார். 50வது வாரமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், ஆரணி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன், மாவட்டகழகசெயலாளர் எல்.ஜெயசுதா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆரணி எம்ஜிஆர் சிலை அருகிலிருந்து அண்ணாசிலை வரை ஊர்வலமாக சென்று துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். வழியில் நடந்து சென்றபடியே டீக்கடை, காய்கறி கடை, பழ கடை, மளிகை கடை, பேருந்து நிறுத்த பயணிகள் போன்ற இடங்களில் மக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் நகர செயலாளர் அசோக்குமார் அனைவரையும் வரவேற்றார். மேலும் இதில் மாவட்ட இணைச் செயலாளர் வனிதாசதீஷ், மாவட்டதுணைசெயலாளர் ஜெ.சம்பத், ஒன்றியசெயலாளர்கள் ஜெயப்பிரகாஷ், திருமால், வீரபத்திரன், விவசாயஅணி மாநில நிர்வாகி செல்வம், மாவட்டபொருளாளர் அரையாளம் வேலு, அம்மா பேரவை ஒன்றியசெயலாளர்கள் செந்தில், புங்கம்பாடி சுரேஷ், முன்னாள் ஊராட்சித்தலைவர் என்.வாசு, நகரமன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, சுதாகுமார், விநாயகம், நடராஜன், எஸ்.கே.வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி துரை, மீனவராணி மாவட்ட செயலாளர் ஆனந்தன், இலக்கிய அணி நிர்வாகி சித்தேரி ஜெகன், விளைசித்தேரி சுரேஷ்பாபு, இளம்பேச்சாளர் பாலாஜி,ஐ.டி பிரிவு நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அண்ணாசிலை வரை ஊர்வலமாக சென்று அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் மீண்டும் அரியணையில் அமர்வார் என்றும் அதற்கு நாம் படுபடவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சூளுரைத்து பேசினார். .
Next Story