அண்ணா 56-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலம்.
Perambalur King 24x7 |3 Feb 2025 4:37 PM IST
பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் முன்னிலையில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 56-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, வேப்பந்தட்டையில் அமைதி ஊர்வலம் சென்று, வேப்பந்தட்டை மற்றும் கிருஷ்ணாபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது! கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்! பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில்,சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் முன்னிலையில், பேரறிஞர் அண்ணா 56-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, வேப்பந்தட்டையில் அமைதி ஊர்வலம் சென்று, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதே போல் கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.அண்ணாதுரை, மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ந.ஜெகதீஷ்வரன், டாக்டர் செ.வல்லபன், பேரூர் கழக செயலாளர்கள் எம்.வெங்கடேசன், ஆர்.ரவிச்சந்திரன், செல்வலெட்சுமிசேகர், ஏ.எம்.ஜாகிர்உசேன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன்(எ)ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங்கர், அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், மா.பிரபாகரன், ஆர்.அருண், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், முன்னாள் பெருந்தலைவர்கள் பிரபா செல்லப்பிள்ளை, க.ராமலிங்கம், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.இராசா, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர்கள் கோபாலபுரம் செல்வராஜ், பாளை.மணிவண்ணன், மாவட்ட பிரதிநிதி எஸ்.அழகுவேல், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரா.சிவா மற்றும் வனிதா சுப்ரமணியன், ஆர்.வினோத், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story