பிப்ரவரி 6 வியாழக் கிழமை அன்று மின் விநியோகம் இருக்காது
X
Perambalur King 24x7 |4 Feb 2025 2:09 PM IST
பெரம்பலூர் நகரில் வரும் பிப்.-6 வியாழக் கிழமை அன்று மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் நகரில் வரும் பிப்.-6 வியாழக் கிழமை அன்று மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பெரம்பலூர் பழைய -புதிய பேருந்து நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், வடக்குமாதவி சாலை, வடக்குமாதவி, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, துறையூர் சாலை, அரணாரை, கடைவீதி, பாலக்கரை, நான்கு சாலை பகுதி, மின்நகர், துறைமங்கலம், கே.கே. நகர், அபிராமபுரம், எளம்பலூர், இந்திரா நகர், சிட்கோ, காவலர் குடியிருப்பு, மற்றும் சமத்துவபுரம், அருமடல் அருமடல் ரோடு ஆகிய பகுதிகளில், அன்று காலை 9.45 மணி முதல் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்றும், பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த உடன் மின் விநியோகம் வழங்கப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.
Next Story