மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விலை சராசரி ரூ. 6,700

X

மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் சராசரியாக குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 6,700க்கு விலைபோனது
மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. 400 விவசாயிகள் 1200 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு வைத்தனர். தேனி, கோவை, கொங்கணாபுரம், பெரம்பலூர், விழுப்புரம், திருப்பூர், கும்பகோணம் மற்றும் ஆந்திரா, குஜராத், உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 12 வியாபாரிகள் மற்றும் மில் அதிபர்கள் கொள்முதல் செய்தனர். பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.7499-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.6011-க்கும் சராசரி விலையாக ரூ.6700-க்கும் விலை போனது. ரூபாய் 80 லட்சம் ரூபாய்க்கு பருத்தியை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். இந்த ஏலத்தில் இந்திய பருத்தி கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story