வருவாய் ஆய்வாளர்கள் 7 பேருக்கு பதவி உயர்வு

X

துணை தாசில்தார்
குமரி மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள் 7 பேருக்கு துணை தாசில்தார்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவட்டார் முதுநிலை வருவாய் ஆய்வாளர் சாந்தி திருவட்டார் தேர்தல் பிரிவு துணை தாசில்தாராகவும், நாகர்கோவில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் அருள் கல்குளம் தாலுகா மண்டல துணை தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர். கலெக்டர் அலுவலக ஐ பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளர் பிரபா, கலெக்டர் அலுவலக இ பிரிவு தலைமை உதவியாளராகவும், பத்மநாபபுரம் சப் கலெக்டர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் கணேஷ்குமார் கிள்ளியூர் தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தார் ஆகவும் மாற்றப்பட்டுள்ளனர். கலெக்டர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் கணேச பெருமாள் கன்னியாகுமரி வரவேற்பு துணை தாசில்தார் ஆகவும், கலெக்டர் அலுவலக ஏ1 பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஷெரீபா பீவி அகஸ்தீஸ்வரம் கூடுதல் தலைமை இடத்து தாசில்தார் ஆகவும், நாகர்கோவில் கோட்ட ஆய அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் பழனிவேல்ராஜன் கலெக்டர் அலுவலக எம் பிரிவு தலைமை உதவியாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா பிறப்பித்துள்ளார்.
Next Story