ராணிப்பேட்டையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.75 லட்சம் மோசடி

ராணிப்பேட்டையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.75 லட்சம் மோசடி
X
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.75 லட்சம் மோசடி
அரக்கோணத் செல்வராஜ்தில் அழகப்பா தொலைத்தூர கல்வி மையம் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருபவர் விஜி. இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-எனது நிறுவனத்தில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அரசு வேலை பெறுவதற்கான பயிற்சி கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் எனது நிறுவனத்தில் படிக்கும் 26 மாணவ-மாணவிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை, பத்திரப்பதிவு துறை போன்ற மாநில அலுவலகங்களிலும், மத்திய அரசின் ரயில்வே துறையிலும் வேலை வாங்கி தருவதாக செல்வராஜ் என்பவர் என்னிடம் தெரிவித்தார். அவர் தடய அறிவியல் துறையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். மத்திய, மாநில அரசு துறைகளில் பணியாற்றும் உயர் அதிகாரிகளை தனக்கு தெரியும் என்றும், பணம் கொடுத்தால் தன்னால் வேலை வாங்கி தரமுடியும் என்றும் கூறினார். அதை உண்மை என்று நம்பி எனது நிறுவனத்தில் படித்த 26 மாணவ-மாணவிகளிடம் அரசு வேலைக்காக ரூ.75 லட்சம் வசூலித்து செல்வராஜிடம் கொடுத்தேன். ஆனால் அவர் முறையாக வேலைவாங்கி தராமல், போலியான அரசாணைகளை கொடுத்து ரூ.75 லட்சத்தையும் மோசடி செய்துவிட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் தடய அறிவியல் துறை ஊழியர் செல்வராஜ் (வயது 44) தற்போது விழுப்புரத்தில் வேலை பார்த்து வருவது தெரிய வந்தது. அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story