வேட்டமங்கலம்- புதிதாக பணியில் சேர்ந்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு 90 நாள் பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது.

வேட்டமங்கலம்- புதிதாக பணியில் சேர்ந்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு 90 நாள் பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது.
வேட்டமங்கலம்- புதிதாக பணியில் சேர்ந்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு 90 நாள் பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. நொய்யல் அடுத்த வேட்டமங்களம் கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 141வது தீயணைப்போர் பயிற்சி கடந்த 3 மாதங்களாக துவங்கி நடைபெற்று வந்தது. தீயணைப்பு துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 650 வீரர்களுக்கு சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 7 இடங்களில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. கரூர் மாவட்டத்தில் இக்கல்லூரியில் தொடங்கப்பட்ட பயிற்சி முகாமில் 100 தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு 90 நாட்கள் அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்ட நிலையில், முகாமின் நிறைவு நாள் விழா இன்று திருச்சி மத்திய மண்டலம் துணை இயக்குனர் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினரும் பார்வையாளர்களாக பங்கேற்றனர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிறைவு நாள் விழாவில் தீயணைப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர். நிகழ்ச்சியில் மூன்று தீயணைப்பு வாகனம் மூலம் மூவர்ண நிறத்தில் தண்ணீர் மூலம் பீய்ச்சி அடித்து காட்சிப்படுத்தியது அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தேர்வுகள் முடிந்து இன்று சான்றிதழ்களும் சமர்ப்பிக்கப்பட்டன. தேர்வில் வெற்றி பெற்றவர்கள் விரைவில் தீயணைப்பு நிலையங்களுக்கு பணிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் நிறைவில் கரூர் உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
Next Story