ஜனாதிபதி விருது பெற்ற CRPF வீரருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு

ஜனாதிபதி விருது பெற்ற CRPF வீரருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு
X

ஜனாதிபதி விருது பெற்ற CRPF வீரருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு

உத்திரமேரூர் அருகே புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட முன்று தீவிரவாதிகளை என்கவுண்டர் செய்து ஜனாதிபதி விருது பெற்று விருப்ப ஓய்வு பெற்ற சிஆர்பிஎப் வீரருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு.





காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள குண்ணவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுப்பிரமணி - சாந்தா தம்பதிகள் மகன் லோகநாதன் வயது 40. இவருக்கு சரண்யா என்ற மனைவியும், தன்வந் என்ற மகனும் உள்ளனர்.

லோகநாதன் கடந்த 2004ம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலிஸ் படையில் சேர்ந்து பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 2019 ம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் முக்கிய தீவிரவாதிகள் மூன்று பேர் கடந்த 2020 ம் ஆண்டு சுட்டு கொள்ளபட்ட நேரடி தாக்குதலில் முக்கிய பங்கற்றியதர்க்காக கடந்த 2022 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திர தினம் அன்று அப்போதைய இந்திய ஜனாதிபதி அவர்கள் லோகநாதனுக்கு வீரதீர செயலுக்கான ஜனாதிபதி விருது வழங்கி கௌரவித்தார்.

இந்த நிலையில் லோகநாதன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று சொந்த ஊரான குண்ணவாக்கம் கிராமத்திர்க்கு திரும்பினார். அவருக்கு அந்த கிராமத்து மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பட்டாசு வெடித்து, மேல தாலங்கள் முழங்க மாலை, சால்வை அணிவித்து, ஆரத்தி எடுத்தும் ஊர்வலமாக அழைத்து சென்று வரவேற்பு கொடுத்தனர்.

இந்த சம்பவம் உத்திரமேரூர் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story