கால்நடை பராமரிப்புத்துறையில், வாகனம் TN  67 G 0621,  அம்பாசிடர் கார்  18.07.2025 அன்று பொது மக்கள் முன்னிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து பொது ஏலம் விடப்படு

கால்நடை பராமரிப்புத்துறையில், வாகனம் TN  67 G 0621,  அம்பாசிடர் கார்  18.07.2025 அன்று பொது மக்கள் முன்னிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து பொது ஏலம் விடப்படு
X
கால்நடை பராமரிப்புத்துறையில், வாகனம் TN  67 G 0621,  அம்பாசிடர் கார்  18.07.2025 அன்று பொது மக்கள் முன்னிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து பொது ஏலம் விடப்படுகிறது -
விருதுநகர் மாவட்டம், கால்நடை பராமரிப்புத்துறையில்  வாகனம் TN  67 G 0621,  அம்பாசிடர் கார்  18.07.2025 அன்று பொது மக்கள் முன்னிலையில் காலை 11.00 மணிக்கு  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மண்டல இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து  பகிரங்க பொது ஏலம் விடப்படுகிறது. நிபந்தனைகள்                  ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் முன்பிணைத் தொகை ரூ.5000/- தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில்  வரைவோலையாக (Demand Draft) Regional Director of Animal Husbandry, Virudhunagar  என்ற பெயரில் எடுக்க வேண்டும். காலை 11.00 மணிக்கு பின் வருபவர்கள் ஏலம் கேட்க அனுமதிக்கப்படமாட்டார்கள். ஏலத்தில் அதிக தொகை கோருபவருக்கு ஏலம் முடிவு செய்யப்படும். அரசு நிர்ணயித்த தொகைக்கு குறைவாக ஏலம் கோரப்படின் ஏலம் இரத்து செய்யப்பட்டு மறு ஏலம் வேறு தேதிகளில் நடத்தப்படும்.  ஏலம் எடுத்தவர் உடன் பணத்தை செலுத்தி பின் பொருளை எடுத்துச் செல்ல வேண்டும். ஏலம் எடுத்தவர் தொகை செலுத்தாத பட்சத்தில் முன்பிணைத் தொகை மீள வழங்கப்படாது. ஏலம் எடுத்தவர் நீங்கலாக மற்றவர்களின் முன்பிணை வரைவோலை (Demand Draft) மீள வழங்கப்படும். இந்த ஏலத்தை இரத்து செய்வதற்கோ ஏலத்தை ஒத்தி வைக்கவோ ஏலத்தை முடித்து வைப்பதற்கோ மண்டல இணை இயக்குநருக்கு முழு அதிகாரம் உண்டு.  ஏலம் எடுப்பவர் ஏலத் தொகையுடன் புளுவு GST 18% (9% + 9%) சேர்த்து செலுத்தி வாகனத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மேற்கண்ட வாகனத்தை அலுவலக வேலை நாட்களில் காலை 11.00 மணி முதல் 5.00 மணி வரை பார்வையிட்டு தேவையான விவரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
Next Story