கரூர்-அறிவாலயத்தில் ஓர் அணியில் தமிழ்நாடு whatsapp எண்ணுடன் லோகோ வெளியீடு.

கரூர்-அறிவாலயத்தில் ஓர் அணியில் தமிழ்நாடு whatsapp எண்ணுடன் லோகோ வெளியீடு.
கரூர்-அறிவாலயத்தில் ஓர் அணியில் தமிழ்நாடு whatsapp எண்ணுடன் லோகோ வெளியீடு. கரூர் மாவட்ட திமுக அலுவலகமான அறிவாலயத்தில் இன்று தமிழக முதலமைச்சரின் முதன்மை திட்டமான ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்திற்கான லோகோ வாட்ஸ்அப் எண்ணுடன் இன்று குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் தலைமையில் வெளியிட்டனர். திமுக கட்சிக்கு உறுப்பினர்களை அதிகரிக்கும் நோக்கத்துடனும், வரும் தேர்தலில் வெற்றியை வசமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்குடனும் திமுக தலைவர் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் ஓரணியில் தமிழ்நாடு. இதன் மூலம் புதிய வாக்காளர்களை கட்சியில் ஈர்ப்பதற்காக வீடு தோறும் சென்று உறுப்பினர் சேர்க்கை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கான லோகோவை இன்று வாட்ஸ்அப் எண்ணுடன் வெளியிட்டனர். இந்த நிகழ்வில் நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story