ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டிப்பட்ட 24 திருநங்கைகளுக்கான குடியிருப்புகளை ஒப்படைத்து மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ் எஸ். ஆர் இராமச்ச
X
Virudhunagar King 24x7 |4 Feb 2025 5:49 PM IST
ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டிப்பட்ட 24 திருநங்கைகளுக்கான குடியிருப்புகளை ஒப்படைத்து மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ் எஸ். ஆர் இராமச்சந்திரன் பேச்சு*
திருநங்கைகள் அரசு தரும் வாய்ப்புகளை பயன்படுத்தி யாரிடமும் கையேந்தாமல் சுயதொழில் செய்து முன்னேற வேண்டும், வாழ்க்கையே போராட்டம் தான் அதில் போராடிதான் வெற்றி பெற முடியும்- ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டிப்பட்ட 24 திருநங்கைகளுக்கான குடியிருப்புகளை ஒப்படைத்து மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ் எஸ். ஆர் இராமச்சந்திரன் பேச்சு விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், இ.குமாரலிங்கபுரம், கோவில் புலிகுத்தி கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 24 திருநங்கைகளுக்கு ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டிப்பட்ட குடியிருப்பு இல்லங்களை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ் எஸ். ஆர் இராமச்சந்திரன் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைத்தார்.இந்த வீடுகள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3.5 லட்சமும் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு நிதி தலா 1 லட்சம் என 4.5 லட்சம் மதிப்பீட்டில் சிறந்த அடிப்படை வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,மக்களால் புறக்கணிக்கப்பட்டும்,தாய்தந்தையரால் புறக்கணிக்கப்பட்டும் சமூக்கத்தில் விளிம்புநிலையில் உள்ள திருநங்கைகளை திராவிடல் மாடல்அரசு தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறது என்றும் திருநங்கைகளாக பிறந்தது அவர்களின் குற்றமில்லை இயற்கையின் தவறு என்றும் இந்த பாதகத்தை ஸ்டாலின் அரசு சரிசெய்து வருகிறது என்றார்.இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி யாரிடமும் கையேந்தாமல் சுயதொழில் செய்து முன்னேற வேண்டும், வாழ்க்கையே போராட்டம் தான் அதில் போராடிதான் வெற்றி பெற முடியும் என்றார்.
Next Story