1000 ஆண்டு பழமையான கோவில் புனரமைக்கும் பணி துவக்கம்.

1000 ஆண்டு பழமையான சிவன் கோவில் ரூ.3.69 கோடி செலவில்  புனரமைக்கும் பணியை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்.
பரமத்தி வேலூர், அக்.13: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள குன்னமலையில் உள்ள 1000 ஆண்டு பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க வல்லீஸ்வரர் கோவிலில் ரூ.3.69 கோடி மதிப்பீட்டில் புணரமைப்பு பணிக்கான பூமி பூஜையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.   நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள குன்னமலையில் 1000 ஆண்டுகள் பழமையான  வரலாற்று பிரசித்தி பெற்ற ஸ்ரீ வள்ளிஸ்வரர் என்கிற திருவேலீஸ்வரர் உடனுறை சுந்தரவல்லி திருக்கோவில் உள்ளது. இக்கோவில் மலை குன்றின் உச்சியில் இருக்கும் சிவன் கோவில் ஆகும். தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ள கோவில்,அர்த்த மண்டபம்,மகா மண்டபங்களை பிரித்து மீட்டமைக்கும் பணி,அம்மன் சந்ததி,விநாயகர் சன்னதி, சண்டிகேஸ்வரர் மற்றும் பைரவர் சன்னதி கட்டும் திருப்பணிகள்,தடுப்பு சுவர் மற்றும் படிக்கட்டுகள் அமைக்க குன்னமலை பகுதி மக்கள் மற்றும் மற்றும் சிவ பக்தர்கள் கோவிலை புணரமைப்பு செய்து கொடுக்க வேண்டி தமிழக அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இக்கோவிலை புணரமைப்பு செய்து கும்பாபிஷேகம் செய்திட ரு 3.69 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் திங்கட்கிழமை கோவில் திருப்பணிக்கான பூமி பூஜையை இந்து அறநிலையத்துறை சார்பில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். பொன்னமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரமத்தி திமுக ஒன்றிய செயலாளர் தனராஜ்நாமக்கல் மேற்கு மாவட்டம் திமுக துணை செயலாளர் அன்பழகன், குன்னமலை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன், கபிலர்மலை வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன், அறங்காவல் குழு உறுப்பினர் கலை சுந்தர்ராஜ்  மற்றும் ஈரோடு இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி வழிகாட்டுதலின்படி நாமக்கல் இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் சுவாமிநாதன், திருச்செங்கோடு உதவி ஆணையர் இரமணிகாந்தன், உதவி செயற்பொறியாளர் காளீஸ்வரி,செயல் அலுவலர் கிருஷ்ணராஜ்,ஆய்வாளர் ஜனனி மற்றும் துறை ஆய்வாளர்கள், துறை  செயலாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story