ரூ.11 கோடியில் கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணி

ரூ.11 கோடியில் கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணி
X
சேலம் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட மூக்கனேரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்காமல் திருமணிமுத்தாற்றில் விடுவதற்காக ரூ.11 கோடியில் 1½ கிலோ மீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணி நடைபெறும் இடத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வில் மாநகராட்சி பொறியாளர் செல்வநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story