ரூ.11.43 கோடி வளர்ச்சி திட்டப்பணிகள் கண்காணிப்பு அலுவலர் கலெக்டர் ஆய்வு.

X

பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் ரூ.11.43 கோடி வளர்ச்சி திட்டப்பணிகள் கண்காணிப்பு அலுவலர் கலெக்டர் ஆய்வு
.பரமத்திவேலூர், ஜூன்.19: பரமத்திவேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சிறுபான்மையினர் நல ஆணையர் ஆசியா மரியம், மற்றும் கலெக்டர் டாக்டர் உமா முன்னிலையில் ரூ.11.43 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் மாணவ-மாணவியர்சு ளுக்கு வழங்கப்பட்ட உணவின் தரத்தினை ருசித்து பார்த்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கோனூர் கிராமத்தில் ரூ.3.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்தியன் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன கட்டட த்தின் கட்டுமான பணிகள். பரமத்தி வட்டம், பிள்ளை களத்தூர் பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைவின் சார்பில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கீழ் ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்வதையும் கூடச்சேரி ஊராட்சியில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மாவுரெட்டிபட்டி, எஸ். புதுப்பாளையம், சாலை வரை ஏற்கனவே உள்ள பாலத்திற்கு பதிலாக புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருவதையும், பரமத்தி பேரூராட்சியில் தேசிய நல குழுமம் சார்பில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணியினையும்,வேலூர் பேரூராட்சியில் அரசு மருத்துவமனையில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் தீவிர சிகிச்சை பிரிவுவையும் பார்வையிட்டனர். நஞ்சைபுகளூர் பகுதியில் காவேரி ஆற்றின் குறுக்கே ரூ.406.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கதவணை பணியினையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டுமான பணிகளையும்,பொத்தனூர் பேரூராட்சியில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் சாலை பலப்படுத்தும் பணியிளை யும், பாண்டமங்கலம் பேரூராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ.77.25 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வகம் மற்றும் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டு வருவதையும், வெங்கரை பேரூராட்சியில் ரூ.9.20 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் குளோரினேசன் மேற்கொள்ளும் பணிகளையும், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் பொன்மலர்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டடம்' கட்டும் பணியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்திட நாமக்கல் கண்காணிப்பு அலுவலர் மற்றும் சிறுபான்மையினர் நல ஆணையர் மு.ஆசியா மரியம் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வுகளின் போது மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குளர் வடிவேல் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story