ஒரே நாளில் புதியதாக 126 மின் கம்பங்கள் !

ஒரே நாளில்  புதியதாக  126 மின் கம்பங்கள் !
X

மின் கம்பங்கள்

மின்கம்பம் மேளா: ஒரே நாளில் 126 மின் கம்பங்கள் புதியதாக அமைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மின்கோட்டத்தில் மின் கம்பம் மேளா மூலம் ஒரேநாளில் 126 மின் கம்பங்கள் மாற்றப்பட்டன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம் சார்பில் மழைக் காலங்களிலும் நுகர்வோருக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு தூத்துக்குடி மின் பகிர்மானவட்ட மேற்பார்வை பொறியாளர் ரெமோனா அறிவுறுத்தலின் படியும் திருச்செந்தூர் மின்விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கர பாண்டியன், வழிகாட்டுதலின் படியும் திருச்செந்தூர் கோட்டத்திற்குப்பட்ட அனைத்து பிரிவு அலுவலக பகுதிகளில் உயர்மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளில் பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றுதல் மற்றும் அதிகஇடைவெளி உள்ள மின் கம்பங்களுக்கு இடையே ஊடு மின்கம்பம் அமைக்கும் மின் கம்பம் மேளா நடைபெற்றது. அதன் அடிப்படையில் திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட பிரிவு அலுவலகங்களில் பழுதான மின்கம்பங்கள் மாற்றுதல் மற்றும் ஊடுமின்கம்பங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. அதில் திருச்செந்தூர்-2, காயாமொழி-3, பரமன்குறிச்சி-9, ஆறுமுகனேரி -7, காயல்பட்டினம் -8, குரும்பூர் – 8, நாசரேத்– 3, ஆழ்வார்திருநகரி-8, மெய்ஞானபுரம்-12, சாத்தான்குளம் நகர்- 9, சாத்தான்குளம் ஊரகம்-7, பழனியப்பபுரம்-6, உடன்குடி நகர்-15, உடன்குடி ஊரகம்-12, படுக்கப்பத்து-2, நடுவக்குறிச்சி-15 ஆகியன மொத்தமாக ஒரே நாளில் 126 மின்கம்பங்கள் புதியதாக நிறுவப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்பணியில் மின் வாரிய அதிகாரிகள், பணியாளர்கள் ஈடுப்பட்டனர்.

Tags

Next Story