17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
X
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் உள்ள துணை சுகாதார மையங்களில் தற்காலிக செவிலியர்களை கொண்டு தடுப்பூசி பணியில் ஈடுபடுத்த கூடாது ANM பணியிடங்களை ஒப்படைப்பு செய்வதை கைவிட வேண்டும். 642 கூடுதல் துணை சுகாதார நிலையங்களில் கிராம சுகாதார செவிலியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் துணை சுகாதார மையங்களில் தற்காலிக செவிலியர்களை பணி நியமனம் செய்வதை கை விட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்க கூடாது. தமிழகத்தில் காலியாக உள்ள 4,000 கிராம சுகாதார செவிலியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். என்பன உட்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம சுகாதாரச் செவிலியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை செவிலியர் கூட்டமைப்பு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழக அரசுக்கு எதிராகவும் சுகாதாரத் துறைக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் தங்களது கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் வழங்கினர்.
Next Story