2சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீதி கார் மோதி 3 பேர் படுகாயம்

2சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீதி கார் மோதி 3 பேர் படுகாயம்
X
வேடசந்தூர் அருகே மிணுக்கம்பட்டி பகுதியில் கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வடமாநில தொழிலாளர்கள் பெண் உட்பட 3 பேர் படுகாயம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மிணுக்கம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் மேற்கு வங்காளம் மாநிலம், பீர் பந்து மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் தாஸ், மிலன் தாஸ் மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரஜனி ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை பெண் தொழிலாளியான ரஜனிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து ரஜினியை ஒரு இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நேற்று இரவு சஞ்சய் தாஸ் மற்றும் மிலன்தாஸ் இருவரும் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மினுக்கம்பட்டி அருகே இருசக்கர வாகனம் சென்றபோது அந்த வழியே அடுத்தடுத்து வந்த 2 கார்கள் திடீரென இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சஞ்சய் தாஸ், மிலன் தாஸ், ரஜனி ஆகிய மூன்று பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வேடசந்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story