20 ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லை

X

20 ஆண்டுகளாக குடிநீர், கழிப்பறை மற்றும் மயான பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை வைத்த தா.அய்யம்பாளையம் ஊர் பொதுமக்கள்
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு பேரூராட்சிக்கு உட்பட்ட மல்வார்பட்டி அருகே 1 வது வார்டு தா.அய்யம்பாளையம் உள்ளது. இந்த ஊரில் 400 இருக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் இப்பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இந்த ஊரில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர், கழிப்பிடம், என அடிப்படை வசதி செய்யப்படவில்லை. எங்களுக்கு உடனடியாக காவிரி கூட்டு குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் வசதியை செய்து தர வேண்டும். கழிவறை வசதி இல்லாததால் பெண்கள் மற்றும் குழந்தைகள் காட்டுப் பகுதிக்கு சென்று வருகின்றனர். ஏற்கனவே இருக்கக்கூடிய ஆழ்துளை கிணறு உபயோகம் இல்லாமல் தான் உள்ளது அதில் முறையான மோட்டாரை பொருத்தி இருக்கும் கழிவறையை சுத்தம் செய்து பயன்படுத்த ஏதுவாக அமைத்து தர வேண்டும் என்று கேட்டனர். மயானத்திற்கு சரியான பாதை வசதி இல்லாததால் இரண்டு அடி ஆழத்திற்கும் மேல் உள்ள சாக்கடை சகதிக்குள் இறங்கி பிணத்தை எடுத்துச் செல்லவேண்டிய நிலை உள்ளது. ஆகையால் எங்களுக்கு குடிநீர், கழிவறை வசதி மற்றும் மயானத்திற்கு வழி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் இதே நிலை நீடித்தால் கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை மரித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக ஒரு பொதுமக்கள் தெரிவித்தனர்.
Next Story