2023 நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Tiruchengode King 24x7 |19 Nov 2024 2:52 PM IST
2023 நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் விவசாய சங்கங்களின் சார்பாக 2023 நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏ ஐ டி யு சி இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட விவசாய சங்கங்களைசேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் 2023 நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக முழுவதும் விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே சி ஐ டி யு அகில இந்திய விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து 2023 நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முழக்கங்களை எழுப்பினர். கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டமன்றத்தில் எந்த விதமான விவாதமும் இல்லாமல் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 250 ஏக்கர் வரை நிலங்களை கொடுக்க முடியும். அதில் நீர் நிலைகள் இருந்தால் அதனை தாங்களே பராமரித்துக் கொள்வதாக உறுதியளித்துவிட்டு, நீர்நிலைகளையும் எடுத்துக் கொள்ளலாம். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நீர் மாசுபாடு, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் எழ வாய்ப்புள்ளது. எனவே இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த ஜூலை மாதத்தில் விவசாயிகள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் தற்போது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி விவசாய சங்கங்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக அரசு இந்த சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் தீவிர படுத்தப்படும் என ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் பெருமாள் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
Next Story