3 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு
X
Dindigul King 24x7 |21 Dec 2024 9:44 AM IST
பழனி அருகே சத்திரப்பட்டியில் நிதி நிறுவன அதிபர் செந்தில்குமார் வீட்டில் 3 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்தது.கணக்கில் வராத நகை,பணம் மற்றும் சொத்து ஆவணங்களை எடுத்து சென்றனர்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சத்திரப்பட்டியில் நிதி நிறுவன அதிபர் செந்தில்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி கன்யாவதி இருவரும் இயக்குநர்களாக இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ராயர் சிட்ஃபண்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் தமிழ்நாடு,மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா,ஒரிசா, பீகார் குஜராத் பல மாநிலங்களில் ஏலச்சீட்டு மற்றும் தொழில் அதிபர்களுக்கு நிதி அளித்து வட்டி தொழில் செய்து வந்துள்ளார். அதே போல பழனி, உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். சமீபத்தில் உடுமலைப்பேட்டையில் ராயல் கார்டன் என்ற பெயரில் மிகப் பிரம்மாண்ட அளவில் வீட்டுமனை விற்பனை வளாகத்தை திறந்து உள்ளார். இதற்கிடையில் செந்தில்குமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்ததாகவும், வருமானவரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்வதாக வெளியான தகவலின் அடிப்படையில் புதன்கிழமை பத்துக்கு மேற்பட்ட கார்கள் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் ஒரு பிரிவினர் சத்திரப்பட்டி செந்தில்குமாரின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை ஈடுபட்டனர். மற்றொரு பிரிவினர். நிதி நிறுவன அதிபர் செந்தில்குமார் வீடு மற்றும் அலுவலகங்களில் கணினி,லேப்டாப் மற்றும் வங்கி பரிவர்த்தனை குறித்து விசாரித்தனர். மேலும் அவருக்கு சொந்தமான ஒரு வீட்டில் இருந்து இருபதுக்கு மேற்பட்ட பைகளில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு,அந்த ஆவணங்கள் குறித்து செந்தில்குமார் மற்றும் அவரது மனைவியிடம் மூன்றாவது நாளாக தொடர்ந்து அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வந்தனர். அதில் கணக்கில் வராத பணம், நகை மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்ற வருமான வரி சோதனை வெள்ளிக்கிழமை நள்ளிரவு முடிவடைந்தது.
Next Story