3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையம் அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.

3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையம் அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.
X
சேளூர் செல்லப்பம்பாளையத்தில் 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையம் அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.
பரமத்திவேலூர்.ஜூன்.19: பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் சேளூர் செல்லப்பம்பாளை யத்தில் ரூ23.81 லட்சம் மதிப்பீட்டில் 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழாவிற்கு கலெக்டர் டாக்டர் உமா தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.மூர்த்தி, கபிலர்மலை வட்டார அட்மா குழு தலைவர் சண்முகம், பரமத்தி வட்ட அட்மா குழு தலைவர் தனராசு, எலச்சிபாளையம் வட்டார அட்மா குழு தலைவர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கலந்துகொண்டு புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையத்தை திறந்து வைத்து சிறப்புரை யாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- முதல் அமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டுமென்ற உன்னத நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். குறிப்பாக விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையில் பால் உற்பத்தியாளர்களின் நவன் காத்திட விட்டருக்கு ரூ.3 வரை வாக்கத்தொகை. கொழுப்பு நிறைந்த பாலுக்கு ரூ.1 கூடுதல் தொகை மற்றும் போனஸ் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆவின் கால்நடை தீவனம் விற்பனை செய்யும் சங்க பணியாளர்களுக்கு 50 கிலோ மூட்டை 1-க்கு ரூ.30 ஊக்கத்தொகையாகவும், சங்கங்களுக்கு ஊக்கத் தொகையாகவும் வழங்கப்பட்டு வருகிறது. வருடந்தோறும் சங்கம் ஈட்டிய லாபத்தில் பால் ஊற்றும் உறுப்பினர்களுக்கு 50 சதவீதம் போனஸ், பங்கு ஈவு மற்றும் ஆதரவு தள்ளுபடி தொகை வழங்கப்படுகிறது. பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளுக்கு 85 சதவீதம் மானியத்தில் கால்நடை காப்பீட்டு வசதி செய்யப்பட்டு வருகிறது.   பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியா ளர்கள் நலநிதி திட்டத்தின் கீழ் சங்கத்தில் பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு மாதம் ரூ.10 சந்தாவில் சந்தா விபத்துக்களில் இறந்தால் ரூ.4 லட்சம். 2 ரூ.2.25. உறுப்புக்கள் இழந்தால் ரூ.2. ஆயிரம் ஒரு உறுப்பு இழந்தால் ரூ.1 லட்சம். திருமண உதவி தொகை ரூ.60 ஆயிரம், கல்வி உதவித்தொகை ரூ.50 ஆயிரம். ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.25 ஆயிரம், வழங்கப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாள ர்களுக்கு கறவை மாடுகள் பராமரிப்பு, தூய பால் உற்பத்தி மற்றும் மரபு வழி மூலிகை மருத்துவம் முதலிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. சங்க பணியாளர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு நவீன பால் பண்ணை தொழில் நுட்பங்களை அறிந்திட திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இல்லம் தேடி உறுப்பினர்களின் கறவைமாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் வசதி செய்யப்பட்டுவருகிறது. கால்நடைகளுக்கு அவசர கால சேவை மையம் மூலம் அவசர கால மருத்துவ வசதி நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது இவ்வாறு அவர் பேசினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் சேளுர் செல்லப்பம்பாளையம் ஊராட்சி திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் நாகர்பாளையம் ஊராட்சி, குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் பாப்பம்பாளையம் ஊராட்சி மற்றும் தண்ணீர்பந்தபாளையம் ஊராட்சி ஒன்றியம் தண்ணீர்பந்தல்பாளையம் ஊராட்சிப் பகுதிகளில் ரூ.84.31 லட்சம் மதிப்பீட்டில் 4 புதிய தொகுப்பு பால் குளிரூட்டும். நிலையங்களை திறந்து வைத்தார். இதன் மூலம் 76 சங்கங்களைச் சார்ந்த 1,816 உறுப்பினர்கள் பயன்பெறுவார்கள்.   மேலும், பரமத்திவேலூர் வட்டம், கூடச்சேரி கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பாண்டமங்கலம் பேரூராட்சி துணை தலைவர் பெருமாள் என்கிற முருகவேல், பொது மேலாளர் (ஆவின்) டாக்டர் சண்முகம். துணைப்பதிவாளர் (பால்வளம்) சண்முகந்தி, தாசில்தார் முத்துக்குமார், கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்க்கொடி, வருவாய்த்துறை ஊரக வளர்ச்சி துறை பால்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டவர்.
Next Story