அழகு முத்துமாரியம்மன் திருக்கோவில் 55 ஆம் ஆண்டு வைகாசி பொங்கல் விழா

ஸ்ரீ அழகு முத்துமாரியம்மன் திருக்கோவில் 55ஆம் ஆண்டு வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்தும்,பூக்குழி இறங்கியும் நேர்த்தி கடனை செலுத்தினர்

மதுரை அவனியாபுரம் செம்பூரணிரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ அழகு முத்துமாரியம்மன் திருக்கோவில் 55 ஆம் ஆண்டு வைகாசி பொங்கல் விழா நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அலகு குத்தி பூக்குழி இறங்கினர். மதுரை அவனியாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அழகு முத்துமாரியம்மன் திருக்கோயில் 55 ஆம் ஆண்டு வைகாசி பொங்கல் உற்சவ விழா தொடங்கியது. முதல் நாள் நிகழ்வில் அம்மனுக்கு கரகம் எடுத்து பொங்கல் வைத்து மாவிளக்கு வைத்து நிகழ்ச்சி நடைபெற்றது.

2ம் நாள் நிகழ்வில் அம்மனுக்கு பால்குடம் வேல்குத்துதல் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் பால்குடம் எடுத்தும் வேல் குத்தி,பூக்குழி இறங்கியும் நேர்த்தி கடனை செலுத்தினர் . மேலும் 3ம் நாள் நிகழ்வில்மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் 4ம் நாள் நிகழ்ச்சியாக அம்மனுக்கு சக்தி கிடா வெட்டுதல் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும். 5ம்நாள் நிகழ்வில் உலக நன்மை வேண்டியும் மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்

Tags

Next Story