75 அடி உயர கொடிகம்பத்தில் பழனி MLA கொடியேற்றினார்

75 அடி உயர கொடிகம்பத்தில் பழனி MLA கொடியேற்றினார்
X
கலைஞர் நூற்றாண்டு விழா திமுக 75 ஆவது ஆண்டு பவள விழா மீனாட்சி நாயக்கன் பட்டியில் 75 அடி உயர கொடிகம்பத்தில் பழனி MLA கொடியேற்றினார்
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் குரும்பபட்டி ஊராட்சி மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டி பிரிவில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் கழக 75 வது ஆண்டு பவள விழா கொடியேற்றும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் நடைபெற்றது. கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை தலைமை வகித்தார். திண்டுக்கல் ஒன்றிய குழு தலைவர் ராஜா, ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் குருசாமி, ராதாகிருஷ்ணன், சுப்புலட்சுமி, அலெக்ஸ், ஜெயராமன், செந்தில்குமார், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். முன்னதாக சுற்றுச்சூழல் அணி மாவட்டத் துணைத் தலைவர் தேவேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். இதில் திண்டுக்கல் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான இ.பெ. செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் 75வது ஆண்டு பவள விழா 75 அடி உயர கொடி கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் திமுக மாவட்ட துணைச் செயலாளர்கள் நாகராஜன், பிலால் உசேன், ஒன்றிய துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தொமுச பேரவை பாண்டியன், குரும்பபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சொக்கலிங்கம், வீரையா, துரைராஜ், சிவராஜ், பாலசுப்பிரமணி, மற்றும் மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் புருஷோத்தமன் நன்றி உரை ஆற்றினார்.
Next Story