சேலத்தில் ஓடும் காரில் தீ விபத்து !

சேலத்தில் ஓடும் காரில் தீ விபத்து !

காரில் தீ விபத்து

சேலத்தில் ஓடும் காரில் தீ விபத்து - தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
சேலம் செவ்வாய்பேட்டை அடுத்த சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 41). இவர், தனியார் டிராவல்ஸ் அலுவலகத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மதியம் இவர் காரில் தாதகாப்பட்டி வேலுநகர் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு கியாஸ் நிரப்புவதற்காக சென்றார். அங்கு கியாஸ் நிரப்பிவிட்டு காரை மீண்டும் ஆன் செய்தார். அப்போது, திடீரென என்ஜினில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரசாத் வேகமாக கீழே இறங்கினார். ஆனால் அதற்குள் கார் என்ஜின் பகுதியில் தீப்பற்றி எரிந்தது. உடனே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்த ஊழியர்கள், தீயணைப்பு கருவிகளை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காரில் பிடித்த தீயை அணைத்தனர். ஆனால் காரின் என்ஜின் பகுதி முழுவதும் தீயில் எரிந்து சேதமானது. காரில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story