மைக்ரோசாப்ட் சர்வர் பிரச்னை: 2வது நாளாக சென்னையில் விமான சேவை பாதிப்பு

மைக்ரோசாப்ட் சர்வர் பிரச்னை: 2வது நாளாக சென்னையில் விமான சேவை பாதிப்பு
X

விமான சேவை பாதிப்பு

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள் எங்கு தளத்தில் நேற்று மதியம் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சென்னையில் இருந்து இயக்கப்படும் இண்டிகோ, ஏர் இந்தியா, ஏர் ஏசியா உள்ளிட்ட விமான சேவைகள் இன்று இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளதால் விமான பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இன்று (2024-07-20) 16 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளன. 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின்றன. லண்டன், சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய், டெல்லி, மும்பை மற்றும் மதுரை போன்ற நகரங்களுக்கு செல்லும் விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

விமான சேவை பாதிப்பு காரணமாக பயணிகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர். விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. பல பயணிகள் தங்கள் பயணங்களை ரத்து செய்துள்ளனர் அல்லது மறுசீரமைப்பு செய்துள்ளனர்.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த பாதிப்பு உணரப்பட்ட நிலையில் மைக்ரோசாப்ட் அல்லது விண்டோஸில் எந்த பாதிப்பும் இல்லை எனவும் க்ரவுட் ஸ்ட்ரைக் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் இந்த கோளாறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Tags

Next Story